News August 27, 2024
கரூர் மாணவிக்கு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் இடம்
கரூர், குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியம் நாடக்காப்பட்டி கருப்பசாமி மகள் புனிதலட்சுமி தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் 627 மதிப்பெண் பெற்று 7.5% இட ஒதுக்கீட்டில் நீட் தேர்வில் மாநில அளவில் 14 வது இடமும் கரூர் மாவட்டம் அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது.
Similar News
News November 20, 2024
கால்வாயில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
கரூர் மாயனூர் அருகே தண்ணீர் பாலம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவர் மாயனூர் இரட்டை வாய்க்கால் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து அருகில் இருந்த பொதுமக்கள் வாய்க்காலில் இறங்கி தேடி குழந்தையை சடலமாக மீட்டனர்.
News November 20, 2024
தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவன்
கரூர் மாநகராட்சியில் உள்ள சிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஹரிஹரன், மல்யுத்த போட்டியில் 100 கிலோ பிரிவில் தமிழ்நாடு அளவில் முதல் இடத்தைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி தலைமையாசிரியரிடம் சான்றிதழ் காண்பித்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெற்றார். உடன் விளையாட்டு ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
News November 20, 2024
மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
குளித்தலை அருகே நங்கவரத்தை அடுத்துள்ள தமிழ்சோலையை சேர்ந்தவர் மதன்குமார். இவரது மகன் ரோகித் ஷர்மா(6). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஆழ்துளை குடிநீர் குழாயை பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தார் அப்போது. மின்சாரம் தாக்கி சிறுவன் கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.