News November 22, 2025

கரூர்: மது விற்ற பெண் கைது

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சுக்காம்பட்டி சேர்ந்த பொன்னுசாமி மனைவி மாரியம்மாள் (46). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் மது விற்ற மாரியம்மாள் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 11, 2026

கரூர்: ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு!

image

கரூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம்.இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார்,வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க!

News February 11, 2026

கரூர்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

image

கரூர் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

கரூர் வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் குறுஞ்செய்தி வரும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!