News March 25, 2025
கரூர் மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

கரூர்: AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News September 17, 2025
கரூர் வருகிறார் துணை முதல்வர்!

கரூரில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.17) காலை 11.00 மணியளவில் பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற (22.09.2025) மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட குறைகள் தொடர்பான புகார்களை அந்த நாளுக்கு முன் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளனர்.
News September 16, 2025
கரூர்: 8 ஆம் வகுப்பு போதும்! அரசு வேலை…

கரூர் மக்களே, 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <