News September 4, 2025
கரூர் மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
Similar News
News November 13, 2025
குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நாளை (14.11.25) காலை 10 மணி அளவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்கும் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
News November 13, 2025
ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கு பயிற்சி!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
கரூர்: விவசாயிகள் குறைந்திருக்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் நவம்பர் 2025 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.


