News September 26, 2025
கரூர்: புகையிலை பொருட்கள் விற்றவர் கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வதியம் குடித்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் 90. அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் புகையிலை விற்ற நடராஜன் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 2, 2026
கரூர்: கலெக்டர் அலுவலகம் முன்பு விபத்து

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில், குணசேகர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, பழனிசாமி ஓட்டிய பேருந்து முன் அறிவிப்பு இன்றி திடீரென பிரேக் போட்டதில் பேருந்து பின்புறம் மோதிய குணசேகர் படுகாயம் அடைந்து, மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
News January 1, 2026
கரூர்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

கரூர் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!
News January 1, 2026
கரூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

கரூர் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <


