News April 6, 2025
கரூர் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில், ஏப்ரல் 08 & 11, 2025 அன்று கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய பயண நிறுத்தம் செய்யப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது. என ரயில்வே அதிகாரி அறிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2025
கரூரில் டாஸ்மாக் இயங்காது !

கரூர்: வருகிற ஏப்.10ஆம் தேதி ‘மகாவீர் ஜெயந்தி’-யை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உலர் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் எனவும், அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 7, 2025
கரூர் கோயிலில் செருப்பு காணிக்கை !

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையில் அமைந்துள்ள கல்யாண வெங்கடரமணர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயிலுக்கு நீண்ட தல வரலாறும் உண்டு. தென்நாட்டின் திருப்பதி எனப் போற்றப்படும் இந்தக் கோயிலை வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. மேலும், செருப்புகளை காணிக்கையாகத் தரும் வழக்கமும் இக்கோயிலில் உண்டு.
News April 7, 2025
கரூர் அங்கன்வாடியில் வேலைவாய்ப்பு!

கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெறுகிறது. ▶️முதன்மை அங்கன்வாடி பணியாளர் – 3 இடங்கள் ▶️குறு அங்கன்வாடி பணியாளர் – 14 இடங்கள்▶️அங்கன்வாடி உதவியாளர் – 44 இடங்கள் நிரப்படவுள்ளது. ஊதியமாக ரூ.7700 முதல் 24200 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் <