News October 14, 2025

கரூர்: நடந்து சென்றவர் மீது பைக் மோதி பலி!

image

விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (45). இவர் கரூர் மாவட்டம் பவித்திரம் முருகன் நகர் சாலையில் நேற்று நடந்து சென்ற போது அவ்வழியே நவீன் என்பவர் ஓட்டி வந்த கேடிஎம் பைக் மோதியதில், ரங்கநாதன் பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தார். ரங்கநாதன் உறவினர் சந்திரன் புகாரில் க.பரமத்தி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 11, 2025

கரூரில் ரேஷன் குறைதீர் முகாம்

image

கரூர் மாவட்டத்தில் (டிசம்பர் 13) அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும். இந்த முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய கார்டு கோரிக்கை, மொபைல் எண் பதிவு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.

News December 11, 2025

கரூர்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

image

கரூர் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 11, 2025

கரூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!