News March 21, 2024

கரூர்: தேர்தல் செலவின பார்வையாளர் ஆலோசனை

image

கரூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நாடாளுமன்ற தேர்தல் செலவின பார்வையாளர் போசு பாபு அலி தலைமையில் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் தொடர்பான செலவினங்களை எவ்வாறு கணக்கிடுவது, அதனைத் தொடர்ந்து, எப்படி கண்காணிப்பது அது தொடர்பான விபரங்களை எவ்வாறு சேகரிக்க, சேகரிக்கப்பட்ட விபரங்களையும், ஆவணங்களையும் எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளை தெரிவித்தார்.

Similar News

News April 3, 2025

பெண்களைக் காக்கும் கடம்பவனேஸ்வரர்

image

கரூர்: குளித்தலையில் புகழ்பெற்ற கடம்பவனேஸ்வரர் கோயிலில் ஒரு சிறப்பு உண்டு. இங்கு காலையில் வழிபட்டால் காசிக்கே சென்று வழிபட்ட பலன் கிடைக்குமாம். மேலும், இந்தக் கோயிலின் மூலவர் பெண்களுக்கு துணையாக நிற்பவராம். இங்கு பெண்கள் தங்களின் குறைகளை முறையிட்டால் அதை உடனடியாகத் தீர்த்துவைப்பார் கடம்பவனேஸ்வரர் என்பது நம்பிக்கை. கரூர் பெண்களே SHARE பண்ணுங்க.

News April 3, 2025

கரூர்: ராணுவத்தில் வேலை.. ஆட்சியர் அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் அக்னிவீர் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த விருப்பமுள்ள ஆண்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக 10.04.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்  அறிவித்துள்ளார். இளைஞர்கள் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 3, 2025

கரூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

image

கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை, கரூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார்.

error: Content is protected !!