News October 16, 2025

கரூர்: தேனீக்கள் கடித்து தொழிலாளி பலி!

image

கரூர்: நொய்யல் அருகே புங்கோடை குளத்துபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(58). விவசாயியான இவரது தோட்டத்தில் சக்திவேல் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், தோட்டத்தில் இருந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள் அவர்களை கடித்தன. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சக்திவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Similar News

News October 16, 2025

கரூர்: கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி!

image

கரூர் டு சின்ன தாராபுரம் சாலையில் அருக்காணி (85) என்ற முதியவர் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் படராம் ஓட்டி வந்த நான்கு சக்கர வாகனம் அருக்காணியின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் நேற்று படராம் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News October 16, 2025

ஜாமீனில் வெளியே வந்த கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள்!

image

கரூரில் கடந்த செப்.27 அன்று நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில், கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் இன்று (அக்.16) திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர். மேலும் ஜாமீனில் வெளி வந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வரவேற்று கரூருக்கு அழைத்துச் சென்றனர்.

News October 16, 2025

கரூர்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

image

கரூர் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <>இந்த<<>> இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!