News August 19, 2025

கரூர்: தெருநாய்கள் பிரச்சனை? உடனே CALL

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் புகார் அளிக்க 04324-260341 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News August 19, 2025

கரூர்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை நடைபெற உள்ளது. புகழூர் நகராட்சி வார்டு 11,12,13-ற்காக ஆர்.எஸ். ரோடு காந்தியார் மன்றத்தில், அரவக்குறிச்சி பேரூராட்சி வார்டுகள் 8 முதல் 15 வரை காமராஜ் நகர் லட்சுமி மண்டபத்தில், நன்னியூர், புஞ்சை கடம்பன்குறிச்சி, துவரப்பாளையம் பி.சி காலனி பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களில், தாந்தோணி வட்டார ஜெகதாபி சமுதாய கூடத்தில் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

கரூர்: டிகிரி முடித்தால் ரூ.35,900 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘Assistant Programmer’ பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.35,900 முதல் ரூ.1,32,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு செப்.9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 19, 2025

கரூர்: கிணற்றில் மூழ்கி இளைஞர் பலி

image

கரூர்: அரவக்குறிச்சி தாலுகா புங்கம்பாடி மேற்கு தடா கோவிலைச் சேர்ந்தவர் சஞ்சய் (22). இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஆரியூர் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்தபோது தனது பர்ஸ் கிணற்றில் விழுந்ததால் அதை எடுக்கச் சென்று மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!