News January 11, 2026

கரூர் துயர வழக்கு.. நாளை டெல்லி செல்கிறார் விஜய்

image

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகவுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று அவர் டெல்லி புறப்படுவதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், நாளை காலை 7 மணிக்கு அவர் புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, வழக்கு தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு, CBI அதிகாரிகளிடம் விஜய் விளக்கம் அளிக்கவுள்ளார்.

Similar News

News February 13, 2026

அழுத்தம் இல்லாமல் விளையாட போகும் IND, PAK வீரர்கள்

image

T20 WC-ல் குரூப் ஏ பிரிவில் இருந்து IND, PAK சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இதனால், பிப்.15-ம் தேதி நடைபெறும் லீக் போட்டியில், IND -PAK வீரர்கள் எந்த அழுத்தங்களும் இல்லாமல் விளையாடவே அதிக வாய்ப்புள்ளது. இப்போட்டியில் வெற்றியைப் பெறும் அணி, அதிகாரப்பூர்வமாக சூப்பர் 8 சுற்று வாய்ப்பை உறுதி செய்யும். தோல்வியை சந்திக்கும் அணிக்கும் வாய்ப்பு பிரகாசமாக தான் இருக்கும்.

News February 13, 2026

21 நாட்கள் விதி தெரியுமா?

image

பிடிக்காத அல்லது கெட்டப் பழக்கத்தை கைவிட வேண்டுமா? அல்லது புதிய விஷயம் ஒன்றை தினசரி பழக்கமாக்க வேண்டுமா? இதற்கு 21 நாட்கள் விதி கைக்கொடுக்கும் என்கின்றனர். எந்த ஒன்றை தினசரி தொடர்ந்து 21 நாட்களுக்கு செய்கிறோமோ, அது அப்படியே தினசரி பழக்கமாகிவிடும் என்கிறது 21 நாட்கள் விதி. இதையே 90 நாட்கள் தொடர்ந்து செய்துவிட்டால், அது உங்கள் வாழ்க்கை முறையாகவே மாறிவிடும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

News February 13, 2026

திமுககாரர் வீட்டில் ஓட்டு கேட்காதீங்க

image

அதிமுக வேட்பாளராக யார் நின்றாலும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றிபெற வைக்க வேண்டும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் தெரு தெருவாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். அதற்காக திமுககாரர் வீட்டில் போய் ஓட்டு கேட்கக்கூடாது; அவர்கள் நமக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்றார். ஒவ்வொரு வாக்கு சாவடியில் உள்ளவர்களும் தரவுகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!