News December 19, 2025

கரூர் துயரம்; விஜய் குறித்து பரபரப்பு போஸ்டர்கள்

image

கரூர் மாவட்டத்தில், வடிவேல் நகர் பகுதியில் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் 41 உயிர்கள் பறிபோய் உள்ளது. இதன் தொடர்பாக ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் விஜய் பற்றி தனித்துவ போஸ்டரால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த போஸ்டரில் இங்கிருந்து ஆடியோ லான்ச்சுக்கு மலேசியா செல்கிறீர்கள், மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிகிறீர்கள், ஏன் கரூருக்கு செல்லவில்லை என வாசகம் பதியப்பட்டிருந்தது.

Similar News

News December 21, 2025

தமிழக அணியில் கரூர் வீராங்கனைகள்

image

தமிழ்நாடு U-17 பெண்கள் பிரிவிலான SGFI, கபாடி போட்டி வருகின்ற டிசம்பர் 24-27 வரை மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. காதில் தமிழக அணியில் விளையாட கரூரைச் சேர்ந்த ஶ்ரீ நிதி மற்றும் வர்ஷிகா ஆகியோர் தேர்வாகியுள்ளார். இவர்களுக்கு கரூர் மாவட்ட கபடி சங்க செயலாளர் சேதுராமன் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் பல்வேறு விளையாட்டு சங்க நிர்வாகிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

News December 21, 2025

கரூரில் வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் பாலவிடுதி அருகே, சிண்ணமுத்தாம் பட்டியில், கன்னியம்மாள் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தார். இந்த தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் நேற்று நேரில் சென்று, கன்னியம்மாள் என்பவரை சோதனை செய்ததில் அவர் மது விற்பனை செய்வதை கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News December 21, 2025

கரூரில் வசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது

image

லாலாபேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த வயலூர் பகுதியைச் சேர்ந்த தனம் (57), மேட்டுமகாதானபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் (44), மேல தாளியாம்பட்டியைச் சேர்ந்த சம்பூரணம் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!