News January 7, 2026

கரூர்: திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் உயிரிழப்பு!

image

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த வினோத்குமார் (31) என்ற இளைஞர், மருத்துவமனையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாத விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பசுபதிபாளையம் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 28, 2026

கரூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

News January 28, 2026

கரூர்: ரயில்வே வேலை! நாளை கடைசி

image

கரூர் மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! இந்தியன் ரயில்வேயில் குரூப் D 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

கரூர்: காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் முதியோர் நலனுக்காக உதவி எண்” (14567)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் முதியோர் மற்றும் அவர்களின் நலவாழ்வுக்கான தகவல், வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தலையீட்டு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும். மூதியோரின் பாதுகாப்பும் நலனும் கருதி, எந்த நேரத்திலும் இந்த எண்ணை அழைத்து உதவியை பெறலாம்.

error: Content is protected !!