News September 21, 2025

கரூர்: தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்!

image

கரூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க, தற்காலிக உரிமம் பெற அக்.10ம் தேதிக்குள் இணையதளம் மற்றும் இ.சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தற்காலிக பட்டாசு கடை அமையவுள்ள இடத்தை, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து, ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் உரிம நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 21, 2025

கரூர் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்று!

image

கரூர் மாவட்டத்தில் தேக்கு, மகாகனி, வேம்பு, குமிழ், செம்மரம், புங்கன், நாவல், மகிழம், பாதாம், புளி மற்றும் வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. தேவைபடுவோர் ஆதார் அட்டை நகல் மற்றும் 2 புகைப்படம் ஆகியவற்றுடன் கரூர் சின்ன தாதம்பாளையத்தில் உள்ள வன விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளகாம். மேலும் விவரங்களுக்கு 94429-17768, 812443-5025 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

News September 21, 2025

8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை கலெக்டர் தகவல்

image

கரூர் மாவட்டத்தில் மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரழிவு, ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலக்காக கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம், 3,328 ஆண்கள், 5,249 பெண்கள் உள்ளிட்ட மொத்தம், 8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததாக தெரிவித்தார்.

News September 21, 2025

கரூர்: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

image

கரூர் மக்களே.. மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <>NPCI <<>>என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHAREit

error: Content is protected !!