News March 26, 2025

கரூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

கரூரில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

Similar News

News February 23, 2026

குளித்தலை அருகே 4 பேர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம், குளித்தலை கோட்டம் சிந்தாமணிப்பட்டி, நங்கவரம், மாயனூர், தோகைமலை காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முருகேசன் (40), சந்திரன் (52), ராஜேந்திரன் (49), அமர்நாத் (21) ஆகிய 4 பேர் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 107 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News February 23, 2026

கரூர்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

image

கரூர் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 23, 2026

BREAKING: கரூர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

கரூர் மாவட்டத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2026-ஆம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இன்று வெளியிட்டார். அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய தொகுதிகளில் மொத்தம் 8,45,164 வாக்காளர்கள் உள்ளனர். இதில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரி பார்க்க voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in அல்லது Voter Helpline செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம்

error: Content is protected !!