News April 13, 2025
கரூர்: தமிழ் புத்தாண்டில் போக வேண்டிய கோயில்

கரூரில் அஞ்சூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் இக்கோயிலை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க
Similar News
News April 15, 2025
ஒரு க்ளிக் உங்க பணம் காலி சைபர் கிரைம் எச்சரிக்கை!

கரூர் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)
News April 14, 2025
கரூர்: கடன் தீர்க்கும் ஈசன்!

கரூர்: பஞ்சப்பட்டியில் உள்ள மதுராந்தகேஸ்வரர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் திருநீறு கலந்து கொடுக்கப்படும் மருந்துப் பிரசாதம் எந்த வித நோயையும் தீர்க்கும் தன்மை கொண்டதாம். மேலும், இங்கு தொடர்ந்து 21 நாட்கள் விளக்கேற்றி வழிபட்டால் கடன் பிரச்னை நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 14, 2025
கரூரில் ஆதார் புதுப்பிக்க சிறப்பு முகாம்

கரூர் மாவட்டத்தில் அஞ்சல் துறை சார்பில் ஆதார் அட்டை பயோமெட்ரிக் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் நாளை(ஏப்.15) முதல் தொடங்குவதாக கரூர் அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் தமிழனின் இன்று தெரிவித்துள்ளார் . ஆதார் விதிமுறைப்படி 5 மற்றும் 15 வயது கடந்த பள்ளி மாணவர்கள் தங்களின் கைரேகை மற்றும் தற்போது புகைப்படம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க அவசியமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது .