News October 31, 2025
கரூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

கரூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க.அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
Similar News
News October 31, 2025
கரூர்: இன்றே கடைசி நாள்!

கரூர் மக்களே, தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் நிறுவன செயலாளர் (ACS/FCS) மற்றும் இடைநிலை நிறுவன செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்படவுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News October 31, 2025
கரூர்: குடும்ப தகராறால் விபரீத முடிவு

கரூர் மாவட்டம் K. பரமத்தி அருகே, குவாரியில் மெக்கானிக்காக பணியாற்றும் மணிகண்டன் என்பவர், நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இந்த விஷயம் அறிந்து மனைவி திட்டியதால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
News October 31, 2025
கிருஷ்ணராயபுரம் அருகே பாசன வாய்க்காலில் சடலம்!

கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டு மகாதானபுரம் பாசன வாய்க்காலில் கூலித்தொழிலாளர் பெரியசாமி (69) உடல் 5 நாட்கள் கழித்து மீட்கப்பட்டது. அவர் கடந்த 26-ம் தேதி வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. லாலாபேட்டை போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடினர். நேற்று மாலை பாசன வாய்க்காலில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.


