News December 22, 2025
கரூர் டவுன் பகுதிகளில் மின்தடை!

பாலம்மாள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பாலம்மாள்புரம், ஐந்து ரோடு, மாவடியான் கோயில் தெரு, ராஜாஜி தெரு, ஆலமர தெரு, கச்சேரி பிள்ளையார் கோயில், சுங்க கேட், திருமாநிலையூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளை நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. என உதவி செய்யப் பொறியாளர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
கரூர்: வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

கரூர் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)
News December 28, 2025
குளித்தலையில் 7 பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை, லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, தோகைமலை, நங்கவரம், மாயனூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார் கண்ணன் (61), பிரகாஷ் (27), பழனிச்சாமி (46), முத்துசாமி (69), குமரவேல் (49), சக்திவேல் (60) உள்ளிட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 169 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News December 27, 2025
கரூர்: நீங்க கேன் தண்ணீர் குடிக்கிறிங்களா?

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)


