News April 8, 2024
கரூர்: ஜோதிமணியை சாடிய முன்னாள் அமைச்சர்

கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, புன்னம் சத்திரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது, “வரும் தேர்தலில், ஜோதிமணியை மீண்டும் வெற்றி பெற வைத்து, ஏமாந்து விட வேண்டாம். ஜோதிமணிக்கு போடும் ஓட்டு, நோட்டாவுக்கு போடுவதற்கு சமம்” என கடுமையாக தாக்கி பேசினார்.
Similar News
News February 3, 2026
கரூரில் நிகழ்ந்த மர்ம மரணம்!

கரூர் வெங்கமேடு கொங்கு நகரைச் சேர்ந்த பாலகுரு (56), செம்மடை பிரிண்டிங் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று நிறுவனத்தின் அறையில் சுயநினைவின்றி இருந்த அவரை மீட்டு GHக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் ராமநாதன் அளித்த புகாரின் பேரில், வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 3, 2026
கரூரில் வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

வேலாயுதம்பாளையம் எஸ்.ஐ கண்ணன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், பெரிய ரங்கப்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள வீட்டில், மதுபாட்டில்களை விற்றதாக திருமூர்த்தி என்பவரது மனைவி வசந்தா, 67; என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 145 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News February 3, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


