News September 1, 2025
கரூர்: சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு

கரூர் மாவட்டம், கரூர் வட்டம் ( செப்டம்பர் 1) தேதி முதல் கரூரில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி கரூரில் மணவாசி, அரவக்குறிச்சி ஆகிய சுங்க சாவடியில் கட்டணம் உயர்வு அதன்படி வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Similar News
News September 3, 2025
கரூரில் ரூ.26.66 கோடி மதிப்பில் நிதியுதவி

கரூரில் கடந்த 4 ஆண்டுகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 40,825 கர்ப்பிணிப் பெண்களுக்காக ரூ.26.66 கோடி மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பிணித் தாய்மார்கள் கருத்தரித்த 12 வாரத்திற்குள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
News September 3, 2025
மாவட்ட காவல்துறை வைத்த பேனர்160=165 என்னவா இருக்கும்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையின் சார்பில் மிக நீள பிளக்ஸ் வைக்கப்பட்டு அதில் 160 மற்றும் 165 என்ற எண்கள் மட்டும் அச்சிடப்பட்டு, அதில் Stay Tune for Update on 06.09.2025 வாசகம் மட்டும் இடம்பெற்றிருந்தது. இது எது சம்மந்தமாக இருக்கும் என பொதுமக்களிடையே மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது என்னவென்றால் ஹெல்மெட் அணியாமல் சென்று இறந்தவர்களின் எண்ணிக்கை என்று காவலர்கள் கூறினர்.
News September 3, 2025
கரூர்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.