News October 22, 2025
கரூர்: சாலை விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி!

கரூர்: புலியூர் உப்பிடமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(48). இவர் அரசு பேருந்து நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று(அக்.21) தனது பைக்கில் தாந்தோணிமலை மில்கேட் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதி பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 26, 2026
கரூர்: ரேஷன் அட்டையில் திருத்தமா?

கரூர் மக்களே, சக்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1)இங்கு <
2) அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3)அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4) சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452-52525 எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் “HI” அனுப்பி தெரிஞ்சுக்கலாம். (SHARE பண்ணுங்க)
News January 26, 2026
வாங்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

கரூர் மாவட்டம் வாங்கல் சாலையில் சுப்பிரமணி என்பவர் தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிரே மதன்குமார் என்பவர் ஓட்டி வந்த பைக் சுப்பிரமணி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 26, 2026
கரூர்: 12th போதும்.. ரூ.44,000 சம்பளம்

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,000
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


