News January 22, 2026
கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது: SC

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனவும், இதில் தலையிட்டு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றும் SC தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக SC உத்தரவின்பேரில் CBI விசாரணை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.
Similar News
News January 27, 2026
Voter List-ல் பெயர் சேர்க்க 15,74,351 பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 15,74,351 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல், வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்து 96,732 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் SIR மூலம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் ஜன.30-ம் தேதி முடிவடைவதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
News January 27, 2026
உதயநிதிக்கு விசில் அடிப்பார் விஜய்: அர்ஜுன் சம்பத்

திமுக எழுதிக் கொடுப்பதையே விஜய் பேசி வருவதாக அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். விஜய்யை டூல்கிட்டாக திமுக பயன்படுத்துகிறது என்றும், விரைவிலேயே அவர் உதயநிதிக்கு விசில் அடிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நிச்சயமாக தேர்தலுக்கு பிறகு விஜய் படங்களில் நடிக்க சென்றுவிடுவார் என்ற அர்ஜுன் சம்பத், அவரை ஒரு ஊழல்வாதி என்றும் சாடியுள்ளார்.
News January 27, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

தொடர் விடுமுறைக்கு பின் இன்று மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். இந்நிலையில், நாளை 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி திருவாரூரிலும், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


