News October 13, 2025

கரூர் சம்பவத்திற்கு போலீசாரே காரணம்: ஆதவ் அர்ஜுனா

image

கரூர் பிரசாரத்திற்கு விஜய், தாமதமாக வந்தார் என சொல்வது அபாண்டமான பொய் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் காவல்துறைதான் தங்களை வரவேற்றது என விளக்கம் அளித்துள்ளார். கரூரில் அசாதாரண சூழல் நிலவுவதாக இருந்தால் பெரம்பலூர் மாவட்டத்தை போல ஏன் தங்களுக்கு முதலிலேயே கூறவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News October 13, 2025

தீபாவளி தீக்காயங்களுக்கு ஒரே போன் கால் போதும்!

image

பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட மக்களாகிய நாமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்நிலையில், தீபாவளி அன்று தீக்காயம் (அ) பிற அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் ‘108’ என்ற ஒரே எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. போன் செய்த அடுத்த சில நிமிடங்களில் குறிப்பிட்ட இடத்திற்கு வருவதற்கு ஏற்றார்போல், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2025

ரஜினி, தனுஷ் வரிசையில் PR: நாகர்ஜுனா

image

சில தசாப்தங்களுக்கு முன்பு நெருப்பு போன்று ஒருவர் வந்து சினிமாவின் விதியையே மாற்றினார், அவர் தான் ரஜினிகாந்த். அதற்கு பிறகு ஒல்லியான ஒருவர் இளைஞர்களின் ஆதரவை பெற்றார், அவர் தனுஷ். அந்த வகையில், தற்போது ஒருவர் வந்துள்ளார், அவர் தான் பிரதீப் ரங்கநாதன் என்று மாஸ் இன்ட்ரோ கொடுத்து புகழ்ந்துள்ளார் நாகர்ஜுனா. உங்களுக்கு பிரதீப்பிடம் பிடித்தது என்ன? கமெண்ட் பண்ணுங்க.

News October 13, 2025

சற்றுமுன்: கனமழை வெளுத்து வாங்கும்

image

தமிழ்நாட்டில் இன்று முதல் 19-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இன்று தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கரூர், திருச்சி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, தி.மலை உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும், நாளை நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

error: Content is protected !!