News September 21, 2025

கரூர்: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

image

கரூர் மக்களே.. மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <>NPCI <<>>என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHAREit

Similar News

News September 21, 2025

கரூர்: +2 போதும்.. ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

கரூர் மக்களே, மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப +2 முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். இதற்கு செப்.23ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

News September 21, 2025

மண்மங்கலம் அதிமுக ஆலோசனை கூட்டம்

image

கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது குறித்து, கரூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் மண்மங்கலம் ஊராட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

News September 21, 2025

கபடி போட்டியை துவக்கி வைத்த எம்எல்ஏ செந்தில்பாலாஜி!

image

கரூர் மாவட்டம், பெரியாண்டாங்கோவில் குடித்தெருவில், கரூர் பெரியாண்டாங்கோவில் கிளை கழகம் மற்றும் உதயா பிரதர்ஸ் கபாடி குழு இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு கபாடி போட்டி நேற்று இரவு தொடங்கியது. இந்தக் கபாடி போட்டியை கரூர் சட்டமன்ற உறுப்பினரும், வி. செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அப்போது, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

error: Content is protected !!