News December 12, 2025

கரூர்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 6, 2026

கரூரில் உயிர் காக்கும் முக்கிய Whatsapp எண்!

image

கரூர் மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!

News March 6, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்; முக்கிய தகவல்

image

கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க கரூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி முகாம் ஏப்ரல் 28 வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் 9,450 பேருக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத்தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாதுகாப்பான இத்தடுப்பூசியை சிறுமிகள் செலுத்தி கொள்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 6, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.5) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!