News October 17, 2025
கரூர்: குளித்தலை அருகே சட்டவிரோத மது விற்பனை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேங்கடத்தான்பட்டி மகன் ஜெயக்குமார் (46) தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது குறித்து நங்கவரம் போலீசார் தகவல் பெற்றனர். அங்கு சென்று அதனை நிரூபித்து, ஜெயக்குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, இன்று கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News October 17, 2025
கரூர்: டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் கவலைக்கிடம்!

கரூர் இரும்பூதிபட்டி பெட்ரோல் பங்க் எதிரே மாணிக்க சுந்தரம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், சென்று கொண்டிருக்கும் பொழுது அதே வழியில் பிரகாஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மாணிக்க சுந்தரம் வாகனத்தின் மீது பின்னால் மோதியதில், தலை மற்றும் கால் பகுதியில் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News October 17, 2025
கரூர்: அலைய வேண்டாம் ‘வாட்ஸ்அப் ஆதார் சேவை’

மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 17, 2025
கரூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!