News April 27, 2024
கரூர்: குப்பை மேட்டில் பச்சிளம் குழந்தை சடலம்

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே காவல்காரன்பட்டி ஆதிதிராவிடர் காலனி சமுதாயக்கூடம் எதிரே உள்ள குப்பை மேட்டில், பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்த வடசேரி விஏஓ கணேசன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று(ஏப்.26) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 7, 2025
கரூர்: புகழூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

கரூர் மாவட்டம் புகழூரில் 9 நவம்பர் 2025 ஞாயிற்றுகிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை TNPL மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் கண் குறைபாடு, பார்வை பிரச்சனை, கண் வலி பரிசோதனை, மருந்துகள் மற்றும் தேவையான கண்ணாடிகள் வழங்கப்படும் .பொதுமக்கள் அனைவரும் இலவசமாக இம்முகாமில் பங்கேற்று மருத்துவ சேவைகளில் நன்மை பெறலாம்
News November 6, 2025
கரூர்: சிறைக்காவலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு காவலர் மற்றும் சிறைக்காவலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு வருகின்ற 09.11.2025 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை 1) கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளில் நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு பேருந்தும் உள்ளது.
News November 6, 2025
கரூரில் வாகன விபத்து; 5 வயது சிறுவன் படுகாயம்

கரூர், சின்ன ஆண்டான் கோவில் சாலையில், ஹரி கிருஷ்ணன் தனது மகன் சபரீஷ் (5) உடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, லிவிக்கா என்ற பெண் தனது இருசக்கர வாகனத்தை ஹரி கிருஷ்ணன் மீது மோதியுளார். இதில் சிறுவன் சபரீஷ் காயமடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இச்சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்கை பதிவு செய்தனர் மற்றும் விசாரணை நடந்து வருகிறது.


