News September 12, 2025
கரூர்: காவல்துறை சார்பில் எச்சரிக்கை!

கரூர் மாவட்டத்தில் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் சட்டபூர்வமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யுமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதாக பொய்வாக்குறுதி வழங்கும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் தகவல் அல்லது புகார் இருப்பின் 1800 599 0050 (ம) 100 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 12, 2025
கரூர்: வயிற்றுவலியால் துடித்த பெண் தற்கொலை!

கரூர்: தாந்தோணிமலை மஞ்சுநாதன் நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி (45) என்பவர் தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற போதிலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம்(செப்.10) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 12, 2025
கரூர்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

கரூர் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <
News September 12, 2025
கரூர்: ஊராட்சி அலுவலகத்தில் வேலை!

கரூர்: தமிழ்நாடு ஊராட்சி அலுவலகங்களில் கிளர்க், டிரைவர், அலுவலக உதவியாளர், வாட்ச் மேன் ஆகிய பணிகளுக்கு காலிப் பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 7 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.19,500 முதல் ரூ.58,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <