News December 9, 2025
கரூர்: கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்!

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில், இன்று (09.12.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்றத் தேர்தல் 2026 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட ஆய்வு பணிக்காக (FIRST LEVEL CHECKING) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 6, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்; முக்கிய தகவல்

கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க கரூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி முகாம் ஏப்ரல் 28 வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் 9,450 பேருக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத்தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாதுகாப்பான இத்தடுப்பூசியை சிறுமிகள் செலுத்தி கொள்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 6, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.5) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
கரூர் மக்களே.. இனி அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <


