News November 23, 2025

கரூர்: கடன் வேண்டுமா? APPLY NOW

image

கரூர் மாவட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் கடன் உதவி வழங்கப்படும். இதில் ரூ.10 லட்சம் வரை வங்கிகள் மூலம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். திட்ட தொகையில், 25 சதவீதம் என அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய அலுவலத்தை அனுகவும். 04234-245177, 8925533960 என்ற எண்ணை அழைக்கவும்.

Similar News

News January 27, 2026

கரூர்: மானியத்துடன் ₹3.50 லட்சம் கடன் வேண்டுமா? CLICK NOW

image

கரூர் மக்களே தமிழ்நாடு அரசின் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதில் 35% அல்லது அதிகபட்சம் ₹3.50 லட்சம் மானியம் உண்டு. தவணை தவறாமல் செலுத்துவோருக்கு 6% வட்டி மானியமும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட மேலாளரை அணுகலாம். யாருக்காவது பயன்படும் SHARE IT

News January 27, 2026

கரூர் அருகே விபத்தில் இருவர் பலி!

image

கரூரில் நடந்த இரு விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். மண்மங்கலம் அருகே கார் மோதியதில் மொபட்டில் சென்ற சுப்பிரமணி (55) பலியானார். வாங்கல் போலீசார் இதனை விசாரிக்கின்றனர். மற்றொரு விபத்தில், டி.செல்லாண்டிபாளையம் அருகே பைக் நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதியதில் வடமாநில வாலிபர் சுர்ஜித் பவுரியா (20) உயிரிழந்தார். பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News January 27, 2026

கரூர் அருகே சிறுமியை சீரழித்த நபர் கைது!

image

கரூர் மாவட்டம் பாப்பக்காபட்டியைச் சேர்ந்த 16 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியை, பொக்லைன் ஆபரேட்டர் கோபிநாத் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ள அந்தச் சிறுமி அளித்த தகவலின்படி, குழந்தைகள் நல அலுவலர் புகாரளித்தார். இதன்பேரில் குளித்தலை மகளிர் போலீசார் கோபிநாத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!