News October 21, 2025
கரூர்: எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்!

கரூர்: பிள்ளபாளையத்தைச் சேர்ந்தவர் திலக்(25). இவருக்கும் லாலாபேட்டையைச் சேர்ந்த பிருந்தா(19) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி, மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
Similar News
News January 22, 2026
கரூர்: வசமாக சிக்கிய மூவர் கைது

கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் மற்றும் கரூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து நேற்று அங்கு சென்ற போலீசார் புகையிலை விற்ற ராமகிருஷ்ணன் 51, ஹரிராம் 29, பாலசுப்பிரமணி 41 ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News January 22, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில், இ-சேவை மையம் வழியாக கட்டணமில்லா பேருந்து பயணச் சீட்டு பெறப் பதிவு செய்யப்படுகிறது. விடுமுறை தவிர்த்த வேலைநாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இச்சலுகையைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 21, 2026
குளித்தலை முன்னாள் எம்எல்ஏ காலமானார்!

குளித்தலை முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வெள்ளியணை ராமநாதன், வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவர் 1962 ஆம் ஆண்டு தமது 26 வயதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நின்றபோது அதிக வாக்கு வித்தியாசத்தில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-ல் கருணாநிதி முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற வேட்பாளராக நின்ற போது வெள்ளியணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.


