News December 15, 2025

கரூர் உட்கோட்டத்தில் மது விற்ற 5 பேர் கைது

image

கரூர் உட்கோட்டம் கரூர், பசுபதி பாளையம், தாந்தோணி மலை, வெள்ளியணை, வாங்கல் ஆகிய காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. தகவல் அறிந்து சென்ற போலீசார் மது விற்ற தமிழ்செல்வன் (38), தனபால் (40), மணிகண்டன் (39), ரவிச்சந்திரன் (42), முத்து (49) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 105 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 21, 2025

கரூருக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள்!

image

தமிழ்நாடு U-17 பெண்கள் பிரிவிலான SGFI, கபாடி போட்டி வருகின்ற டிசம்பர் 24-27 வரை மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. அதில் தமிழக அணியில் விளையாட கரூரைச் சேர்ந்த ஶ்ரீ நிதி மற்றும் வர்ஷிகா ஆகியோர் தேர்வாகியுள்ளார். இவர்களுக்கு கரூர் மாவட்ட கபடி சங்க செயலாளர் சேதுராமன் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் பல்வேறு விளையாட்டு சங்க நிர்வாகிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

News December 21, 2025

கரூர் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

கரூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 21, 2025

கரூர்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

கரூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE<<>>.
வேலை தேடும் ஏழை இளைஞன் யாருக்காவது உதவும் இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!