News October 21, 2025

கரூர் இளைஞர்களின் கவனத்திற்கு!

image

கரூர் மாவட்டத்தில் வாழும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை, அழகுக்கலை, மற்றும் பச்சை குத்துதல் இலவச பயிற்சிகள் தாட்கோ மூலம் 90 நாட்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கு இந்த இணைய தளத்தில் (www.tahdco.com) பதிவு செய்து பயன்பெறுமாறு
கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 4, 2026

கரூரில் புதுமாப்பிள்ளை துடிதுடித்து பலி!

image

கரூர் மின்னம்பள்ளியைச் சேர்ந்த குமரேசன் (35), திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், நேற்று மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். பலத்த காயங்களுடன் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் சிவகாமி அளித்த புகாரில் வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 4, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

சம்பா நெல் சாகுபடியையொட்டி,குளித்தலை, பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, இனுங்கூர், நச்சலுார், கல்லடை, கே.பேட்டை, நங்கவரம், சின்னபனையூர், கழுகூர், திருச்சாப்பூர், புகழூர் வட்டம் அஞ்சூர் ஆகிய, 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு விவசாயிகள் நேரில் சென்று பயன் பெறலாம். மேலும் முறைகேடுகள் குறித்து 18005993540 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் அறிவிப்பு!

News February 4, 2026

கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!