News November 1, 2025
கரூர்: இன்று 11 மணிக்கு..! மக்களே ரெடியா

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று நவ.1-ம் தேதி காலை 11 மணி அளவில் கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும். இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, வட கிழக்கு பருவமழை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். கிராம மக்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள் தெரிவிக்கலாம். (SHARE)
Similar News
News November 1, 2025
கரூர் சம்பவம்- அஜித் ஓபன் டாக்!

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அஜித் சமீபத்திய அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “கரூர் நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த தனிநபர் மட்டுமே இதற்கு காரணம் அல்ல. நாம் அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கும்இதில் ஒரு பங்கு இருக்கிறது. ஒரு சமூகமாக கூட்டத்தை கூட்டிக் காட்டுவதில் நாம் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறோம். இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும் என்றார்.
News November 1, 2025
கரூரில் இலவச மருத்துவ முகாம்!

கரூர் வெண்ணைமலை நாளந்தா அறக்கட்டளையும் கரூர் அரசன் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் (நவ.2) நாளை, கரூர் சர்ச் கார்னர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. ஹென்றி லிட்டில் நினைவு ஆலய வளாகத்தில் நடைபெறும். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். மேலும் முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆதார் நகல் மற்றும் செல்பேசி எண்ணுடன் வரவேண்டும்.
News November 1, 2025
கரூர்: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


