News May 22, 2024

கரூர் : இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

கரூர் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News September 20, 2025

கரூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், 22.09.2025 ஆம் தேதியன்று மாலை 4.00 மணியளவில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு, எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 20, 2025

கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.09.2025 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.கரூர் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News September 20, 2025

கரூர்: கல்வி உதவித் தொகை வேண்டுமா?

image

கரூர் மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.www.bcmbcw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் 31.10.2025 தேதிக்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டிடம் முதல் தளம் சேப்பாக்கம், சென்னை-600 005. என்ற விலாசத்தில் அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

error: Content is protected !!