News January 19, 2026

கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

Similar News

News January 27, 2026

கரூர் அருகே விபத்தில் இருவர் பலி!

image

கரூரில் நடந்த இரு விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். மண்மங்கலம் அருகே கார் மோதியதில் மொபட்டில் சென்ற சுப்பிரமணி (55) பலியானார். வாங்கல் போலீசார் இதனை விசாரிக்கின்றனர். மற்றொரு விபத்தில், டி.செல்லாண்டிபாளையம் அருகே பைக் நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதியதில் வடமாநில வாலிபர் சுர்ஜித் பவுரியா (20) உயிரிழந்தார். பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News January 27, 2026

கரூர் அருகே சிறுமியை சீரழித்த நபர் கைது!

image

கரூர் மாவட்டம் பாப்பக்காபட்டியைச் சேர்ந்த 16 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியை, பொக்லைன் ஆபரேட்டர் கோபிநாத் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ள அந்தச் சிறுமி அளித்த தகவலின்படி, குழந்தைகள் நல அலுவலர் புகாரளித்தார். இதன்பேரில் குளித்தலை மகளிர் போலீசார் கோபிநாத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 27, 2026

கரூர் அருகே சோகம்: சிறுவன் மர்ம மரணம்

image

கரூர் மாவட்டம் குப்புரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் மகேஸ்வரன், நேற்று தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அவரது தாய் தீபா அளித்த புகாரின் பேரில், நங்கவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!