News April 12, 2024
கரூர்: ஆவணமின்றி காரில் கொண்டு வந்த பணம் பறிமுதல்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான நிலையான கண்காணிப்பு குழு இன்று மைலாடி இரட்டை வாய்க்கால் பாலம் அருகே வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவ்வழியே வந்த Renauld Triber என்ற வாகனத்தை சோதனை செய்ததில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நெய்தலூர் கிராமம், கட்டளை மேடு பகுதியை சேர்ந்த அருண்குமாரிடம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1,10,400 பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 29, 2025
கரூர்: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News December 29, 2025
மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

கரூர் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியைச் சேர்ந்த 30வயதுடைய பெண் மருத்துவர் பணியாற்றி வருகிறார். இவரை அங்கு சமையல் வேலை செய்யும் விஜயகுமார் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி, அனுமதியின்றி புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 29, 2025
குளித்தலையில் 8 பேர் அதிரடி கைது

கரூர் மாவட்டம் மாயனூர், தோகைமலை, பாலவிடுதி, லாலாபேட்டை, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி, நங்கவரம் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக ஆசைத்தம்பி (27), ராமலிங்கம் (58), பழனிசாமி (37), குணசேகர் (60), வெற்றிவேல் (47), முருகன் (51), சிவக்குமார் (45), ஜெயக்குமார் (40) ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் 204 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்


