News January 10, 2026
கரூர்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News February 17, 2026
கரூர்: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம் NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News February 17, 2026
கரூர் MP ஜோதிமணி பற்றி அவதூறு பேச்சு!

கரூரில் 10-02-26 அன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்துப் பெண்ணின் மாண்பைக் குறைக்கும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாகக் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக புகாரின் அடிப்படையில், கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 17, 2026
நங்கவரம் அருகே வசமாக சிக்கிய பெண் உட்பட ஒருவர் கைது!

கரூர் மாவட்டம், நங்கவரம் அருகே பெத்தாயி என்ற பெண்மணியும், நடைபாலம் பகுதியில் சுப்பிரமணி என்பவரும், தனித்தனியாக சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் நேரில் சென்று இருவர்களையும் மடக்கி பிடித்து, மேலும் அவர்களிடமிருந்து விற்பனை போக வைத்திருந்த 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


