News January 28, 2025
கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில், ஜவுளி தொழில் முனைவோர்களுக்கு தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் மூலமாக, கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகத்தில், தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான டெக்ஸ்டைல்ஸ், அக்ரோ ஜியோ மொபைல் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் மண்டல துணை இயக்குனர் தான்தோன்றிமலை முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் (04324 298588) என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Similar News
News April 21, 2025
தேசிய போட்டிக்கு கரூர் வீரர் தேர்வு

கரூர் வீரர் சீனியர் பிரிவிலான தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு. எதிர் வரும் தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு சீனியர் பிரிவில் தமிழக அணி சார்பாக விளையாட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த M.பிரசாந்த் என்ற வீரர் தேர்வாகியுள்ளார். இவருக்கு கரூர் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலாளர் Dr.ராஜேந்திரன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News April 21, 2025
கரூரில் வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

கரூர்: புகழூர் மூலிமங்கலம் பிரிவு அருகே நேற்று மெக்கானிக் தனசேகர் காரை ஓட்டி வந்தபோது, கார் மளமளவெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அனணத்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. கரூரில் வெயில் சதம் அடித்து வரும்நிலையில் அடிக்கடி பேட்டரி வாகனங்கள், கார் ஆகியவை தீ பற்றி எரிவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
News April 20, 2025
வாழ்வில் ஏற்றம் தரும் கல்யாண விகிர்தீஸ்வரர்

கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர் அருகே பிரசித்தி பெற்ற கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கல்யாண விகிர்தீஸ்வரர், நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தோஷம், புத்திர தோஷம், பெண்களின் சாபம் போன்றவை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.