News December 25, 2025
கரூர் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கரூர் மாவட்டம், சிந்தலவாடி அருகே திம்மாச்சிபுரம் பகுதியில் தங்கையான் (70) என்ற முதியவர், தொடர்ச்சியான வயிற்றுவலி காரணமாக மனவிரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சோகமேம்பாடு ஏற்பட்டுள்ளது. லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 1, 2026
கரூரில் ரூ.1000 உதவி தொகை: அறிவித்தார் கலெக்டர்!

கரூர் மாவட்டம், சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு, கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், இடை நிற்றலை குறைக்கவும் தமிழக அரசால் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு அந்தந்த தலைமை பள்ளி ஆசிரியர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News January 1, 2026
அரவக்குறிச்சி பெண் விபத்தில் பலி!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி சாலையில், குணசேகர் என்பவர் தனது தாயார் ராமுத்தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனம் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த குணசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News January 1, 2026
கரூரில் வீடு கட்ட ரூ.2.50 லட்சம்: விண்ணப்பிப்பது எப்படி?

ஏழை எளிய மக்கள் வீடு கட்ட உதவும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விண்ணபிக்க <


