News January 17, 2025
கரூர் அரசுப்பள்ளியில் இளம் விஞ்ஞானி

பஞ்சப்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் +2 பயிலும் தினேஷ் என்ற மாணவன் காற்று உந்து விசையில் இயங்கும் *Reusable Rocket Model* செய்து, காற்று அழுத்தம் கொடுத்து இயக்கினார். 20 அடி உயரம் சென்று ராக்கெட் உந்து விசையில் செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. பாராசூட் உதவியுடன் ராக்கெட் மாதிரியை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் அற்புதமான செயல்விளக்கத்தை செய்துகாட்டினார்.
Similar News
News August 23, 2025
கரூரில் கலை கட்டப் போகும் திருவிழா!

கரூரில் நாளை(ஆக.24) இயற்கை வேளாண்மை திருவிழா காலை 9:00 – மாலை 6:00 வரை கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், கண்காட்சி, சிறப்புப் பயிற்சி பட்டறை, இயற்கை உணவு செய்முறை பயிற்சி, 100க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் முதலியவை இடம்பெறவுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு இலவச இயற்கை உணவு வழங்கப்படும். இதற்கு நுழைவு கட்டணம் இல்லை, என இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். (SHARE)
News August 23, 2025
கரூரில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்

கரூர்: மைலம்பட்டி மேற்கு பகுதியில் மைலம்பட்டி, தரகம்பட்டி, சீதப்பட்டி, அய்யம்பாளையம், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சூரியகாந்தியை சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் அதிக அளவு நடவு செய்கின்றனர். மேலும் தற்போது பெய்துள்ள மழையால் நல்ல விளைச்சலை சூரியகாந்தி கொடுத்துள்ளது என மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் வெளிப்படுத்திக் கொண்டனர்.
News August 23, 2025
கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட கூட்டரங்கில் (25.08.2025) அன்று மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து எரிவாயு நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் தெரிவித்தார்.