News October 22, 2025
கரூர்:அரவக்குறிச்சி கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக இன்று ரூ.17 கோடி நிதி ஒதுக்கி நிர்வாக அனுமதி வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, கரூர் மாவட்ட மக்களின் சார்பில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில் பாலாஜி நன்றியை தெரிவித்துள்ளார்.
Similar News
News October 23, 2025
கரூர்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 23, 2025
கரூர் தொகுதியை குறிவைக்கும் விஜய்? வெளியான தகவல்!

கரூர்: ஜோதிடர் அறிவுரைப்படி, ‘வி’ என துவங்கும் தொகுதி ஏதாவது ஒன்றில் போட்டியிட முடிவெடுத்திருந்த விஜய், கரூரில் தான் விஜய் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 41 பேர் இறந்த சம்பவத்திற்கு பின், விஜய் மீது மக்களுக்கு ஈர்ப்பு அதிகமாகி இருக்கிறதே தவிர, அவர் மீது துளியும் வெறுப்போ; அதிருப்தியோ இல்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
News October 23, 2025
க.பரமத்தி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் புஞ் சைகாளக்குறிச்சி எல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் மணி (60). இவர், நேற்று முன்தினம் நொய்யல்- க.பரமத்தி சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். – அப்போது, கிரஷர் மேடு அருகில் எதிரே வந்த கார் மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.