News April 6, 2024
கரூரில் வீட்டிலிருந்தே 3323 பேர் வாக்களிக்க ஏற்பாடு

கரூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1804 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 1429 பேரும் என மொத்தம் 3323 வாக்காளர்கள் வீட்டிலிருந்தே தபால் மூலம் 12d படிவம் பெற்று வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதில் வாக்களிக்க ஏதுவாக 56 குழுக்கள் நியமிக்கப்பட்டு அஞ்சல் வாக்குகள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
Similar News
News January 22, 2026
கரூர்: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

கரூர் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News January 22, 2026
கரூர்: வசமாக சிக்கிய மூவர் கைது

கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் மற்றும் கரூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து நேற்று அங்கு சென்ற போலீசார் புகையிலை விற்ற ராமகிருஷ்ணன் 51, ஹரிராம் 29, பாலசுப்பிரமணி 41 ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News January 22, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில், இ-சேவை மையம் வழியாக கட்டணமில்லா பேருந்து பயணச் சீட்டு பெறப் பதிவு செய்யப்படுகிறது. விடுமுறை தவிர்த்த வேலைநாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இச்சலுகையைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.


