News May 3, 2024
கரூரில் வழிப்பறி இருவர் கைது செய்த காவல்துறை

வெள்ளியணை பகுதியில் இரவு நேரங்களில் தனியாக இருசக்கர வாகனங்களில் வருவோரிடம் வழிப்பறி செய்வதாக புகார் வந்ததை அடுத்து பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் சங்கரலிங்கம் (28), தேவகோட்டை, தென்னரசு (23) ஆகியோரை நேற்று கைது செய்து ரூ.30,000 மதிப்புள்ள கைப்பேசிகள், ரூ.3000 மற்று இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்
Similar News
News November 7, 2025
கரூரில் இன்று பல இடங்களில் மின்தடை…!

கரூர் மாவட்டம்; புலியூர், புகழூர், கரூர் டவுன், அரவக்குறிச்சி, ஆண்டிச்செட்டிப்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட 6 துணை மின்நிலையங்களில் நிலையங்களில் இன்று (நவ.07) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
கரூரில் 3 பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம், குளித்தலை சிந்தாமணிப்பட்டி பகுதியில் வெளியூர் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது தொடர்பாக மைலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மைதின் (48), கமருதீன் (58), மற்றும் குருணிக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த முஜீப் ரகுமான் (50) ஆகிய மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அசாம் மாநில லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 7, 2025
வாலாந்தூரில் வீட்டில் மது விற்றவர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாலாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை மகன் செந்தில்குமார் 52. இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற செந்தில்குமார் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.


