News November 29, 2024
கரூரில் மாபெரும் ஆணழகன் போட்டி

TAMILNADU AMATEUR BODY BUILDING அசோஸியேஷன் கரூர் மாவட்டத்தில் வருகின்ற 15.12.2024 அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஜி ஆர் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பாடி பில்டர்ஸ் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறிக்கை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு உண்டு என்று கூறியுள்ளனர்.
Similar News
News August 23, 2025
கரூரில் இலவச வக்கீல் சேவை வேண்டுமா..?

கரூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ▶️கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 23, 2025
கரூரில் கலை கட்டப் போகும் திருவிழா!

கரூரில் நாளை(ஆக.24) இயற்கை வேளாண்மை திருவிழா காலை 9:00 – மாலை 6:00 வரை கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், கண்காட்சி, சிறப்புப் பயிற்சி பட்டறை, இயற்கை உணவு செய்முறை பயிற்சி, 100க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் முதலியவை இடம்பெறவுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு இலவச இயற்கை உணவு வழங்கப்படும். இதற்கு நுழைவு கட்டணம் இல்லை, என இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். (SHARE)
News August 23, 2025
கரூரில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்

கரூர்: மைலம்பட்டி மேற்கு பகுதியில் மைலம்பட்டி, தரகம்பட்டி, சீதப்பட்டி, அய்யம்பாளையம், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சூரியகாந்தியை சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் அதிக அளவு நடவு செய்கின்றனர். மேலும் தற்போது பெய்துள்ள மழையால் நல்ல விளைச்சலை சூரியகாந்தி கொடுத்துள்ளது என மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் வெளிப்படுத்திக் கொண்டனர்.