News February 15, 2025

கரூரில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர் குண்டாஸில் கைது

image

கருப்பகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது  மல்லிகை கடையில் மண்ணெண்ணெய் நிரப்பி தீ பற்ற வைத்தது தொடர்பான வழக்கில்  முகமது அன்சாரி என்பர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை பேரில் ஆட்சித் தலைவர் தங்கவேல் உத்தரவின்படி இன்று முகமது அன்சாரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News December 25, 2025

கரூர்: பைக்கில் சென்ற இளைஞர் லாரி மோதி படுகாயம்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு தேவதானம் பகுதியைச் சேர்ந்த கண்ணனின் மகன் மாதேஸ்வரன் (27) நேற்று தனது பைக்கில் மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் விஸ்வநாதன் ஓட்டி வந்த லாரி மோதியது. இதில் மாதேஸ்வரன் படுகாயம் அடைந்தார். இவர் தற்போது கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். சம்பவம் தொடர்பாக லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

கரூர்: தோகைமலை அருகே கோர விபத்து!

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே, சுரேஷ் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் சேகர் ஓட்டி வந்த அசோக் லைலாண்ட் லாரி சுரேஷின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையாடுறகு இறந்தவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News December 25, 2025

கரூர் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கரூர் மாவட்டம், சிந்தலவாடி அருகே திம்மாச்சிபுரம் பகுதியில் தங்கையான் (70) என்ற முதியவர், தொடர்ச்சியான வயிற்றுவலி காரணமாக மனவிரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சோகமேம்பாடு ஏற்பட்டுள்ளது. லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!