News February 4, 2026
கரூரில் புதுமாப்பிள்ளை துடிதுடித்து பலி!

கரூர் மின்னம்பள்ளியைச் சேர்ந்த குமரேசன் (35), திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், நேற்று மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். பலத்த காயங்களுடன் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாயார் சிவகாமி அளித்த புகாரில் வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 18, 2026
கரூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News February 18, 2026
கரூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News February 18, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

சம்பா நெல் சாகுபடியையொட்டி,குளித்தலை, பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, இனுங்கூர், நச்சலுார், கல்லடை, கே.பேட்டை, நங்கவரம், சின்னபனையூர், கழுகூர், திருச்சாப்பூர், புகழூர் வட்டம் அஞ்சூர் ஆகிய, 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு விவசாயிகள் நேரில் சென்று பயன் பெறலாம். மேலும் முறைகேடுகள் குறித்து 18005993540 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் அறிவிப்பு!


