News June 10, 2024

கரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் 261 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், 3 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தனித்துறை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 8, 2025

தோகைமலை அருகே அலப்பறை.. தட்டி தூக்கிய போலீஸ்

image

தோகைமலை அருகே ராமச்சந்திரன், பூவரசன் ஆகிய இருவரும் பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்திக்கொண்டு அலப்பறை செய்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் தோகைமலை போலீசார் நேரில் சென்று இருவர்களையும் மடக்கி பிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News November 8, 2025

கரூர்: வங்கியில் வேலை! விண்ணப்பிக்கவும்

image

கரூர் மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)

News November 8, 2025

கரூர்: B.E, B.Tech போதும் வேலை ரெடி

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://www.nsic.co.in/Careers/Index என்ற இணையத்தில் பார்க்கவும்.
7.(SHARE பண்ணுங்க)

error: Content is protected !!