News December 7, 2025
கரூரில் தட்டி தூக்கிய செந்தில் பாலாஜி

கரூர் வடக்கு பகுதி மீனவர் அணி இணைச் செயலாளராக இருந்த ரமேஷ், மற்றும் அ.தி.மு.க உறுப்பினர்களான சுரேஷ், ஆதி, சபீர் அகமது (2வது வார்டு) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி எம்எல் ஏ செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது எம்எல்ஏ சிவகாமி சுந்தரி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Similar News
News December 10, 2025
கரூரில் விபத்து; இளைஞர் பலி…!

கரூர்: நாமக்கல் மாவட்டம் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த மனோஜ் (24), தனது பைக்கில் வாங்கல் நாவல் நகர் சாலையில் பயணித்தார். பின்னால் வந்த சந்தோஷ் குமார் ஓட்டிய கார் பைக்கை மோதியதில் மனோஜ் கீழே விழுந்து காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தந்தை கந்தசாமி அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 10, 2025
கரூரில் கட்டட தொழிலாளி மர்ம மரணம்!

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புன்னம்சத்திரம் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி பழனிசாமி (55), இரண்டு மனைவியுடன் இருந்தும் சடையம்பாளையத்தில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவர் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
கரூரில் கோர விபத்து; மூதாட்டிப் படுகாயம்!

கரூர் வீரணம்பட்டி அம்மன் கோவில் அருகே, மாரியாயி (70) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அவ்வழியே அடையாளம் தெரியாத வந்த நான்கு சக்கர வாகனம், மாரியாயி மீது மோதியதில் படுகாயம் அடைந்து, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி மூலமாக குற்றவாளி தேடி வருகின்றனர்.


