News November 17, 2025
கரூரில் சட்டவிரோத மது விற்பனை; ஒருவர் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் அடுத்த பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் விஜயகுமார் (65). இவர் தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற விஜயகுமார் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 16, 2025
கரூர்: லாட்டரி டிக்கெட் விற்றவர் மீது வழக்கு பதிவு

கரூர் மாவட்டம், பாலவிடுதி பகுதியில் சண்முகவேல் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தார். பாலவிடுதி போலீசார் தகவல் அறிந்து, சண்முகவேல் என்பவரிடமிருந்து வெள்ளை தாளில் எழுதப்பட்ட ஆன்லைன் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சண்முகவேல் மீது பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
News November 16, 2025
கரூர்: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News November 16, 2025
குளித்தலையில் இரண்டு பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குப்பாச்சிபட்டி மற்றும் நாப்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற அய்யனூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (63) , பில்லாபாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (31) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.


